மட்டக்களப்பு மாநகரசபையின் வாரம் ஒரு சிரமதான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானம் இன்று சிரதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது.
கடந்த மாதம் கள்ளியங்காடு இந்து மயானம் சிரமதான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று கிறிஸ்தவ மயானம் தூய்மைப்படுத்தப்பட்டது.
இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த சிரமதான நிகழ்வில் மாநகர பிரதி ஆணையாளர் தனஞ்செயன்,பொறியியலாளர் அச்சுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கிறிஸ்த மயானத்துக்குள் இருந்து பற்றைகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டதுடன் பிரதான வீதியில் இரு மருங்கிலும் இருந்த பற்றைக்காடுகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
அத்துடன் மயானத்தின் முன் பக்கமாக சேதமாக்கப்பட்டிருந்த பகுதிகளில் கற்கள் போடப்பட்டு தார் ஊற்றி சீர்செய்யப்பட்டதுடன் சேதமடைந்த வீதியும் திருத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக எம்.உதயகுமார் பொறுப்பேற்றதினையடுத்து வாரம் ஒரு ஒருமுறை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மிகவும் மோசமான நிலையில் இருக்கின்ற பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுவருகின்றன.
கடந்த வாரம் மட்டக்களப்பின் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடம் தொடக்கம் கல்லடி பொதுச்சந்தை வரையான பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு இன்று அப்பகுதி அழகாக காட்சி தருகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச மக்கள் ஆணையாளருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.