தனது எல்லையை விஸ்திரனம் செய்துகொள்ளும் சட்டரீதியான உரிமை மாநகரசபைக்கோ, நகரசபைக்கோ கிடையாது கிழக்கு மாகாணசபையினால் கூட செய்யமுடியாது.மத்திய அரசாங்கத்தின் மூலமே அதனைச்செய்யமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.உதயகுமார் தெரிவித்தார்.
காத்தான்குடி நகரசபையின் தீர்மானம் தொடர்பில் மத்திய அமைச்சரவையின் கொண்டுசெல்லப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பூநொச்சிமுனையில் காத்தான்குடி நகரசபையின் நடவடிக்கையினை விஸ்தரிப்பது தொடர்பில் காத்தான்குடி நகரசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
ஒரு எல்லையினை மாநகரசபையினாலோ,நகரசபையினாலோ நிர்ணயிக்கமுடியாது.கிழக்கு மாகாணசபையினால் கூட செய்யமுடியாது.மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சின் மூலம் மட்டுமே எல்லை தொடர்பில் தீர்மானம் செய்யமுடியும்.
2008ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாநகரசபையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உறுப்பினராக இருந்துள்ளார்.நினைத்ததுபோன்று ஒரு நகரசபை எல்லை நிர்ணயம் தொடர்பில் செயற்படமுடியாது.
இந்த செயற்பாடுகள் இனங்களுக்கிடையே குரோத உணர்வுகளை ஏற்படுத்துபவையாக அமையும்.அவற்றிற்கான காரணத்தினை காத்தான்குடி நகரசபையே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
காத்தான்குடி நகரசபையின் தீர்மானம் தொடர்பில் மத்திய உள்ளுராட்சி அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.