GuidePedia

முதலுதவப் பயிற்சியினால் உயிர்களைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் இருநாள் முதலுதவிப் பயிற்சி மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களுக்காக மாவட்ட சென் ஜோன் அம்பியுலன்ஸ் சங்கப் படையினரால் நடாத்தப்பட்ட இப்பயிற்சியில் 30 பேர் கலந்து கொண்டனர்.

மாநகர ஆணையாளா எம். உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களினால் வெளியேறும் குருதிப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி சென் ஜோன் அம்பியுலன்ஸ் மாவட்ட உதவி ஆணையாளர் எஸ். ஸ்ரான்லியினால் விளக்கமளிக்கபட்டன.

மார்க்கா நிறுவன திட்ட அதிகாரி கே. சந்திரலிங்கம், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் மாவட்ட ஆணையாளர் எஸ். சவுந்தரராஜா மற்றும் மாநகரசபையின் சமூக சுகாதார உத்தியோகத்தர் வி. பிரதீபன் அகியோர் கலந்து கொண்டனர்.

சென் ஜோன் அம்பியுலன்ஸ் சங்கப் படையின் முதலாவது பாசறை 2000 ஆம் ஆண்டு மாவடிவேம்பில் நடைபெற்றது. இதில் 13 முதலுதவிப் படையினர் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.







 
Top