GuidePedia

மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தியிலும் நகர அலங்காரத்திலும் பங்காளிகளாக தங்களை இணைந்து திட்டங்களை மேற்கொள்வது எமது நோக்கமாகும். அத்துடன் நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக கவனிப்பார் அற்று கிடந்த வடிகாண்கள், வீதியோரங்கள் பாரிய சிரமதானம் மூலம் மாற்றியமைக்கப்படுவதுடன், நகரின் தூய்மை கெடாமல் சுற்றாடல் மாசடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார். 

மேலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளால் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. தாங்கள் பொறுப்பெடுத்ததன் பின்னர் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி நகரை அழகுபடுத்தும் தங்களது செயல்திட்டத்திற்கு வர்த்தக சங்கத்தினர் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் கலாச்சார பிரச்சனைகள், வீதி விளக்குகள் எரியாமை மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் திண்ம கழிவகற்றல் சம்பந்தமாக ஆணையாளரிடம் தெரிவித்தவேளை, ஆணையாளர் உடடினயாக உரிய உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து சில விடயங்கள் தீர்வு காணப்பட்டதை காணக்கூடியதாக இருந்நது.

மேலும் நகரில் உள்ள கடைகளுக்கு முன்னால் காணப்படும் வடிகாண்களின் மேற்பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளதால் ஊழியர்கள் துப்பரவு செய்ய முடியாதவாறு உள்ளது. இத்துடன் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சுகாதாரத்திற்கு கேடாகவும் மக்களுக்கு தீமை பயக்கக் கூடியதாகவும் உள்ளது. இதனை நாம் உணர்ந்து செயற்படுவது எமது கடமையாகும். இதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் கோருவதாக மாநகர ஆணையாளர் திரு. மா.உதயகுமார் கேட்டுக்கொண்டார்.

வர்த்தகர்கள் தங்கள் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக 
உறுதியளித்ததுடன் மேற்படி சந்திப்பில் திருப்தியடைந்ததை காணக்கூடியதாக இருந்தது.


Next
Newer Post
Previous
This is the last post.
 
Top