GuidePedia

மட்டக்களப்பு மாநகர சபையின் வரலாற்றில் மாநகர பாலர் பாடசாலைகள் நான்கினையும் ஒருங்கிணைத்து மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்ட விளையாட்டு விழா நிகழ்வானது நேற்றைய தினம் (31) வியாழக்கிழமை பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய  திருமதி. பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்/ புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரி அருள்மரியா மற்றும் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

மாநகர சபையின் கீழ் இயங்கிவரும் எல்லைவீதி பாலர் பாடசாலை, நாவற்குடா பாலர் பாடசாலை, இருதயபுரம் பாலர் பாடசாலை மற்றும் புதூர் பாலர் பாடசாலை ஆகிய நான்கு பாலர் பாடசாலைகளுக்கு இடையிலேயே இவ்விளையாட்டு விழா நிகழ்வானது ஏற்பாடுசெய்யப்பட்டு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது சிறார்களின் பாண்ட் வாத்திய இசை முழக்கத்துடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்று தேசிய கீதம் , மாககர கீதம் என்பன இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து  விளையாட்டு வீர , வீராங்கனைகளினால் ஒழும்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

அடுத்து சிறார்களின் மழலை வார்த்தைகளினால் மும்மொழிகளிலும் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டமையினைத் தொடர்ந்து அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களினாலும் உடற்பயிற்சி கண்காட்டிசி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான ஏனைய விளையாட்டுக்கள் நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

























 
Top