சட்டவிரோதமாக வீதியோரங்களில் வியாபரத்தில் ஈடுபடுபவர்களை தடைசெய்யும் திடீர் நடவடிக்கை ஒன்றில் இன்று புதன்கிழமை முற்பகல் மட்டக்களப்பு மாநகர சபையினர்ஈடுபட்டனர்.
இதில் வீதியைத் தடைசெய்யும் வகையிலும் சுற்றாடலை அசுத்தப்படும் வகையலும் விற்பனை செய்யப்பட்ட பழங்கள், வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் மாநகர சபையினரால் கைப்பற்றப்பட்டன.
ஏற்கனவே பல தடவைகளில் எச்சரிக்கப்பட்டிருந்த போதும் தொடர்ச்சியாக இவ்வாறான வியாபாரங்க் நடைபெறுவதனாலேயே இந்தத் திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
சட்ட விரோதமான முறையில் வீதி யோரங்களில் வியாபாரத்தில் பொது மக்களின் பாவனைக்குதவாத பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்ற வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதே நேரம் சூழலும் அசுத்தப்படுத்தப்படுகின்றது.
இதன் குப்பைகள் அருகிலுள்ள ஆற்றிலும், வடிகன்களிலும் வீசப்படுவதனால் கிருமிகள் பரவுவதற்கும், டெங்கு நோய் பரவுவதற்கும் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

Post a Comment Blogger Facebook