
மட்டக்களப்பு மாநகர சபையினால் இவ்வாண்டிற்கான உள்ளூராட்சி வாரமானது 16.06.2014 - 22.06.2014 வரையான காலப்பகுதியில் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் அனுஷ்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறாக அனுஷ்டிக்கப்படும் வாரத்தினை ஆறு நாட்களாக பிரித்து ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் மக்கள் சேவைக்காக செயற்பட தீர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், பின்வருமாறு அந்நிகவுகள் இடம்பெறவுள்ளன.
1ம் நாள்
(16.06.2014) – வருமான மேம்பாட்டு தினம் 'செலுத்தப்படும் வரிப்பணம் வளமான வாழ்விற்கு அர்ப்பணம்'
2ம் நாள்
(17.06.2014) – நடமாடும் சேவைகள் தினம் 'மாநகர சபையுடன் இணைவோம் சேவைகளை அறிந்து கொள்வோம்'
புதூர், கல்லடி மற்றும் மாமாங்கம் ஆகிய இடங்களிலிருந்து ஊர்வலம் மூலமும் வீதி நாடகம் மூலமும் மாநகர சபையின் சேவைகளை மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
3ம் நாள்
(18.06.2014) – சுகாதாரம் மற்றும் துப்பரவேற்பு தினம் 'வாழி சூழ் அழகிய நகரம் வளமுடன் பேணுதல் எம் கடமை'
4ம் நாள் (19.06.2014) – மக்கள் பயன்பாட்டு தினம் :மக்களுக்காக மாநகரம் மாநகரத்திற்காக மக்கள்'
5ம் நாள்
(20.06.2014) – சுற்றாடல் மற்றும் மரம் நாட்டும் தினம் 'மரம் நடுவோம் வளமான சூழலிற்கு உரமிடுவோம்'
6ம் நாள்
(21.06.2014) – கல்வி மற்றும் நூலக அபிவிருத்தி தினம் 'வீட்டிற்கொரு நூல் நாட்டிற்கொரு நற்பிரஜை'
இந்நிகழ்வுகளில் மட்டு மாநகரின் வளர்சியில் பங்குகொள்ள விரும்பும் அனைத்து நல்லுள்ளங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு மாநகர சபையின் சார்பில் மாநகர ஆணையாளர் அழைப்புவிடுக்கின்றார்.