GuidePedia

0

கிழக்கு மாகாண சபையால் அண்மையில் நடாத்தப்பட்ட அதி விஷேட விருது விழாவில் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையை பார்வையிட மூதூர் பிரதேச சபையினர் இன்று 25.09.2014 வியாழக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.


இக்குழுவில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஜனாப் ஏ.எம். ஹறீஸ் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர். 

இவர்களுக்கு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமாரினால் தமது மாநகர சபையில் செயற்படுத்தியுள்ள திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் இதன்போது மாநகர அலுவலக அமைப்புக்களும் காண்பிக்கப்பட்டது.






Post a Comment Blogger

 
Top