மட்டக்களப்பு மாநகரசபையின் தூய்மை வாரத்தின் சிரமதான நிகழ்வு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பகுதியில் இருந்து கல்லடி வரையில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான நிகழ்வில் மாநகரசபை ஊழியர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக உதயகுமார் கடமையேற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு நகரினை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் நோக்குடன் தூய்மை வாரத்தினை பிரகடனப்படுத்தி ஒவ்வொரு வாரமும் சிரமதான பணியினை மேற்கொண்டுவருகின்றார்.
இதன் கீழ் இன்று காலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தொடக்கம் கல்லடி டச்பார் வீதி வரை சிரமதான பணிகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள் மற்றும் இயந்திரங்களைக்கொண்டு இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அத்துடன் மட்டக்களப்பு வாவியின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையும் புனரமைக்கப்பட்டது.
தூய்மை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு 11வது சிரமதானப்பணியாக இன்றைய சிரமதான பணிகள் நடத்தப்பட்டன.
இந்த தூய்மை வாரம் மூலம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் நிறைந்த பகுதிகள் அவை அகற்றப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.