GuidePedia

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கில் உள்ள எட்டு சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் மட்டும் இந்த வருடம் முதல் மூன்று மாதத்தில் 60 டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளனர்.  இவற்றில் நாவற்குடா விலே அதிகமாக 30 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனை கட்டுப்படுத்தும் வகையில் நரவற்குடாவில் காலை 7 மணி முதல்  மட்டக்களப்பு மாவட்ட ஆனையாளரின் தலைமையின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பதற்காக சுகாதார பரிசோதகர்கள் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் கிராம சேவையாளர்கள் பிரதேச செயலக பிரிவு உத்தியோகஸ்தர்கள் மற்றும் இராணுவம் மற்றும் பொலிஸார் உட்பட 350 பேர் கலந்து கொண்டனர்

இவர்கள் அனைவரும்; சுகாதார பரிசோதகர்கள் தலைமையின் கீழ் 8 குழுக்களாக பிரிந்து இந்த  டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளது இந்த நடவடிக்கை சிவானந்தா பிள்ளையார் கோவில் வீதி தொடக்கம் மஞ்சந்தொடுவாய் உள்ள ஆற்றங்கரை மற்றும் கடற்கரை  வரை உள்ள பகுதிகள் முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டது

இதன் போது டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படும் இடங்களை வைத்திருப்போருக்கு எதிராக 36 சட்ட நடவடிக்கைகளும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது 

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கும் முகமாக அன்றைய தினம் கவனிப்பார் அற்ற காணிகள் 24 மாநகர சபையால் பொறுப்பேற்கப்பட்டது. இதன்போது மொத்தம் 1650 வீடுகள் சோதனை செய்யப்பட்டது
 
Top