மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட
இருபது வட்டாரங்களிலும் வரி செலுத்துவதில் அதிக ஆர்வத்துடன் செயற்படுபவர்கள் வறுமை
கோட்டின் கீழ் வாழும் வறிய குடும்பங்கலாகவே இருக்கின்றார்கலென அண்மையில் மட்டு
மாநகர சபையின் ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு
மாநகர அலுவலக கட்டிடத்தில் இடம்பெற்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கும் போதே ஆணையாளர் மேற்கண்டவாறு கூறினார்.
‘’செலுத்தும் வரிப்பணம் வளமான வாழ்விற்கான
அர்ப்பணம்’’ எனும் தொனிப்பொருளில் வருமான நிலுவைகளை அறவிடும் மாதமாக 2014 – யூன் மாதத்தினை
மாநகர சபையினால் பிரகடணப்படுத்தியுள்ளதனை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தி
இவ்விடையத்தினை ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுசெல்வதற்காகவே ஏற்பாடு
செய்யப்பட்ட இச்சந்திப்பின் போது ஆணையாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்னும்
செலுத்தப்படாது நிலுவையாகவுள்ள என்பது மில்லியன் வரியினை மக்கள் மிக விரைவாக செலுத்துமிடத்து
எமது எதிர்கால திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்நிதியானது மீண்டு மக்களையே
சென்றடையும் வண்ணம் வட்டாரத்திற்கு ஒரு வேலைத்திட்டம் எனும் அடிப்படையில் வரியிருப்பாளர்களுக்கு
நற்சேவையாற்றுவதற்காகவே திட்டம் தீட்டியுல்லோமென கூறினார்.